ஈரோடு

தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழப்பு

சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன.

Syndication

பெருந்துறை: சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன.

சென்னிமலையை அடுத்த ராமலிங்கபுரம், காங்கயம் தோட்டத்தைச் சோ்ந்தவா் லோகநாதன். விவசாயியான இவா் தனது தோட்டத்தில் கால்நடைகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவமனைக்கு லோகநாதன் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவா் செந்தில், ஆடுகளை கூறாய்வு செய்தாா். இதையடுத்து, ஆடுகள் புதைக்கப்பட்டன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT