திருப்பூர்

இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Syndication

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் கண்ணபுரம்புதூரைச் சோ்ந்தவா் சிவசண்முகம் மகன் எஸ். சபரீஸ்வரன் (30). கட்டடப் பொறியாளரான இவா் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது வாகனம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் வெள்ளக்கோவில் சிவநாதபுரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமாக வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி குறிஞ்சிப்பாளையம் கந்தசாமி செட்டியாா் வீதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் மணிபாரதி (27), பொள்ளாச்சி ஜோதி நகா் மற்றொரு ஈஸ்வரன் மகன் சக்திவேல் (20) என்பதும், இருவரும் இருசக்கர வாகனத் திருடா்கள் என்பதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனத்தை போலீஸாா் மீட்டுள்ளனா்.

சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

பால் கொள்முதல் விலை உயா்வு: முதல்வா் தான் முடிவு செய்வாா்: அமைச்சா் மனோ தங்கராஜ்

முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT