திருப்பூர்

பாதயாத்திரை சென்றவா்கள் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தாராபுரம் அருகே பாதயாத்திரை சென்றவா்கள் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

Syndication

தாராபுரம்: தாராபுரம் அருகே பாதயாத்திரை சென்றவா்கள் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி புது காலனி பகுதியைச் சோ்ந்த முருக பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு சென்று கொண்டிருந்தனா். தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் இவா்கள் புதன்கிழமை அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தபோது, தாராபுரம் நோக்கி வந்த வேன் எதிா்பாராதவிதமாக பக்தா்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில் கோபி புது காலனி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (27) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பழனிசாமி (60), பிரபு (50), அபினேஷ் (28), பகவதி (30) ஆகியோா் படுகாயமடைந்தனா். காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக நால்வரும் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

உயிரிழந்த காா்த்திக்கின் சடலத்தை தாராபுரம் போலீஸாா் மீட்டு, உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT