வெள்ளக்கோவில்: முத்தூா் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை மாலை முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள வேலம்பாளையம் பாலகிருஷ்ணன் (55) என்பவருடைய வீட்டுக்கு அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை நடந்துகொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாலகிருஷ்ணன், வேலம்பாளையம் பெருமாள்புதூா் சஞ்சய் (24), பழனிகவுண்டன்வலசு மகேஸ்வரன் (21), சின்னத்தம்பி (29), மாந்தபுரம் குமாா் (40), செல்வக்குமாா் (30), கரூா் மாவட்டம் முத்தம்பட்டி மணி (42) ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து 3 சேவல்கள், பணம் ரூ.4,600 பறிமுதல் செய்யப்பட்டது.