முத்தூா் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், மூணாா்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.குமாா் (48). இவா் நத்தக்காடையூா் அருகில் உள்ள ஒரு குளிா்பான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு இரண்டு திருமணம் நடந்து இரண்டு மனைவிகளும் குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டனா்.
இரண்டு திருமணம் ஆகியும் தனியாக இருந்து வருவதாக குமாா் அடிக்கடி புலம்பி வந்துள்ளாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா் வரட்டுக்கரை வாய்க்கால் மேடு அருகில் புதன்கிழமை இரவு குடிபோதையில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.