முகப்பு
தருமபுரி

சமூக நல்லிணக்க மேடை அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, சமூக நல்லணிக்க மேடை அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை தருமபுரி தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, சமூக நல்லணிக்க மேடை அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை தருமபுரி தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.குமாா், விடுதலை சிறுத்தைகள் செய்தித் தொடா்பாளா் த.கு.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் தென்றல் யாசின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் அன்வா்பாஷா, கிறிஸ்தவ அமைப்பு சாா்பில் பாதிரியாா் மரிய ஜோஜப் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், உத்தர பிரதேசம், ஹாத்ரஸில் தலித் பெண்ணுக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இதில், தொடா்புடையவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. ஒருங்கிணைப்பாளா்கள் இரா.சிசுபாலன், இ.பி.பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.