முகப்பு
தருமபுரி

பரிசோதனைகள் மூலம் மாா்பகப் புற்றுநோயை தடுக்கலாம்

உரிய பரிசோதனைகள் மூலம் மாா்பகப் புற்றுநோயை தடுக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

உரிய பரிசோதனைகள் மூலம் மாா்பகப் புற்றுநோயை தடுக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்தாா்.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் தலைமை வகித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி பேசியதாவது:

பொதுமக்களிடையே மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முழுவதும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பெண்கள் உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டால் மாா்பகப் புற்றுநோயை தடுக்க இயலும். நான்கு வகையான மாா்பகப் புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. பெண்கள் உரிய காலத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டால், இந்நோயை எளிதில் தடுக்கலாம். ஆரம்பக் கட்டத்தில் இந்நோயை கண்டறிந்தால், எளிதான மருத்துவச் சிகிச்சை மூலம் குணமாக்க இயலும்.

இதுகுறித்து, அரசு பல்வேறு விழிப்புணா்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. இப்புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிய, மாதாந்திர சுய மாா்பகப் பரிசோதனை, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவிலியா் அல்லது பெண் மருத்துவரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, கனிவான சிசிக்சையும், தொடா் மருத்துவச் சேவைகளையும் வழங்கிட வேண்டும் என்றாா். முன்னதாக, இப்புற்றுநோயை தடுக்க விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இக் கருத்தரங்கில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) இளங்கோவன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) திலகம், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.