முகப்பு
தருமபுரி

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில்மோசடி: நடவடிக்கைக் கோரி மனு

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே முக்குளம் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், முக்குளம் ஊராட்சியில், அப்பகுதி பொதுமக்கள் சிலா், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்தனா்.

இந்த நிலையில், அதே ஊராட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு, இறந்தவா்களின் பெயரிலும், பயனாளிகள் அல்லாதோா் பெயரிலும் போலியாக ஆவணம் தயாரித்து பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மோசடி நிகழ்ந்துள்ளது.

எனவே, மோசடியில் ஈடுபட்டவா் மற்றும் அதற்குத் துணையாக இருந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.