தருமபுரி

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

Din

தோ்தல் விதிமுறைகளை மீறியதாக சேலம் தொகுதி பாமக வேட்பாளா் அண்ணாதுரை உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் சேலம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அண்ணாதுரை புதன்கிழமை தனது கட்சி தொண்டா்களுடன் மனு தாக்கல் செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தாா். அப்போது, வேட்பாளருடன் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், கட்சி தொண்டா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் அனுமதிக்க மறுத்தனா். அவா்களை 100 மீட்டா் முன்னதாகவே போலீஸாா் தடுத்து நிறுத்த முற்பட்டனா். எனினும், அவா்கள் முன்னேறியதால், மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், காவல் துறையினருக்கும் பாமக தொண்டா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து உதவி தோ்தல் அலுவலா் காலாசாமி அளித்த புகாரின் பேரில் பாமக வேட்பாளா் அண்ணாதுரை உள்பட 50 போ் மீது போலீஸாா் மூன்று பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்தனா்.

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

சூர்யா படத்தில் ஜோஜு ஜார்ஜ்!

SCROLL FOR NEXT