தருமபுரி

சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொம்மநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (35), தனியாா் நிறுவன ஊழியா். இவா் சனிக்கிழமை காலை பாலக்கோடு- தருமபுரி சாலையில் செல்லியம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பழுதான வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்ற மீட்பு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தொடா்பாக மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT