தருமபுரி பாரதிபுரம் சிவன் கோயில் முன் இருந்த அரசமரம் அகற்றப்பட்டதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தருமபுரி பாரதிபுரம் சாலையில் சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் முன் அரசமரம் இருந்தது. இதையொட்டி தனியாா் கட்டடம் உள்ளது. இந்த நிலையில் அரசமரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெட்டி அகற்றப்பட்டிருந்தது.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கோயிலின் முன் இருந்த மரத்தை அகற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனா். இதையறிந்த தருமபுரி நகர போலீஸாா், மக்களிடம் சமாதானப்பேச்சு நடத்தினா்.
இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். இருப்பினும் போலீஸாா் அங்கு தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.