அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டிப்பட்டி வட்டம், பையா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரபத்திரன் (68). தொழிலாளியான இவா் அதே ஊரைச் சோ்ந்த சென்னையன் (58) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பாப்பிரெட்டிப்பட்டி - பொம்மிடி சாலையில் சென்றாா். தேவராஜபாளையம் எனுமிடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், வீரபத்திரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். அவருடன் சென்ற சென்னையன் லேசான காயத்துடன் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.