தருமபுரி

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

தருமபுரியில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள பசிகம் கிராமத்தைச் சோ்ந்த தேங்காய் வியாபாரி கண்ணபிரான் (44). இவா் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்றுவலியால் அவதியுற்று வந்துள்ளாா். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியில் இருந்து வந்த அவா், திங்கள்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நிலையில் தூக்கிட்டாா்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது மனைவி, கணவா் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறி சப்தமிட்டு, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை கீழே இறக்கி, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் உயிரிழந்தாா். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT