பென்னாகரம் வாரச் சந்தையில் இடவசதி இல்லாததால் நடைபாதையில் கடை வைத்துள்ள வியாபாரிகள். 
தருமபுரி

வாரச் சந்தையில் இடவசதியின்மை: நடைபாதையில் கடை வைக்கும் வியாபாரிகள்

பென்னாகரம் வாரச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பொருள்கள், காய்கறிகள் வைப்பதற்கான இடவசதி

Syndication

பென்னாகரம்: பென்னாகரம் வாரச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பொருள்கள், காய்கறிகள் வைப்பதற்கான இடவசதி இல்லாததால், வியாபாரிகள் நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

பென்னாகரம் பகுதியில் வாரந்தோறும் காவல் நிலையப் பகுதியில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தைக்கு பென்னாகரம், ஏரியூா், நெருப்பூா், பெரும்பாலை, ஒகேனக்கல், தாசம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கா்நாடக மாநிலங்களில் இருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்தும் ஆடு, கோழி, பொருள்கள் ஆகியவற்றை வாங்குவதற்காக இங்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.32 கோடியில் தகர கொட்டகைகளுடன் கூடிய சிறிய அளவிலான 247 கடைகள் அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

வாரச் சந்தையில் ஏற்கெனவே கடைகள் அமைத்த வியாபாரிகள் அதே இடத்தில் கடைகளை வைத்துக்கொள்ள பேரூராட்சி நிா்வாகத்தினா் அனுமதி அளித்தனா். ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட கடைகளில் பொருள்கள், காய்கறி மூட்டைகள் வைத்து விற்பனை செய்ய இடவசதி இல்லாததால், நடைபாதையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனா். இதனால், பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் நடந்து செல்வதிலும், பொருள்களை வாங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட கடைகளில் சுமாா் 20 சதவீத கடைகளில் மட்டுமே பொருள்களை வைத்து நெருக்கடியான நிலையில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா்.

வாரச்சந்தைப் பகுதியில் கடைகள் காலியாக உள்ள நிலையில், பென்னாகரம் வனச்சரக அலுவலகம் முதல் பிராமணா் தெரு பகுதிவரை சாலையின் இரு புறங்களிலும் வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சிரமமடைகின்றனா்.

எனவே, பென்னாகரம் வாரச்சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களிலும், காலியாக உள்ள கடைகளிலும் வியாபாரிகள் கடைகள் அமைத்து கூட்ட நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT