தருமபுரி

800 ஆண்டு பழைமையான கோயிலில் 30 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் தேர்!

தருமபுரி, ஜன. 3: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அளேபுரத்தில் உள்ள 800 ஆண்டு பழைமையான அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேர் 30 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், தேரோட்டம் நடைபெறாம

ஜெபலின்ஜான்

தருமபுரி, ஜன. 3: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அளேபுரத்தில் உள்ள 800 ஆண்டு பழைமையான அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேர் 30 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், தேரோட்டம் நடைபெறாமல் உள்ளது.

  800 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த கிருஷ்ணதேவராய மன்னரின் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுத் தகவல் தெரிவிக்கிறது.

 இக்கோயிலில் மூர்த்தி உஜ்ர நரசிம்மராக காட்சி அளிக்கிறார். கோயிலில் கற்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்படபம் என மூன்று பிரிவுகள் உள்ளன. மகாமண்டபத்தில்  ராமர், ஆஞ்சநேயர், காலபைரவர் ஆகியவற்றுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

 மூர்த்தி உக்ர நரசிம்மராக இருந்தாலும் சுவாமிக்கு அடியில் லட்சுமி தேவி பூபந்தனமாக இருப்பதால் சுவாமி லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். மகாமண்டபத்தின் எதிரில் சுமார் 30 அடி உயரத்தில் மரத்தினாலான கொடிமரம் உள்ளது. இதன் வெளிப்பகுதி பித்தளை தகட்டால் வேயப்பட்டுள்ளது.

 மார்கழியில் வைகுந்த ஏகாதசி, சித்திரையில் நரசிம்ம ஜெயந்தி ஆகிய திருவிழாக்கள் இக்கோயிலில் பிரசித்தி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். கடைசியாக 17.3.2006-ல் குடமுழுக்கு நடைபெற்றது.

 800 ஆண்டு பழைமையான இக் கோயில் தேர், எண் கோண வடிவில் 3 அடுக்குகளைக் கொண்டது. உயரம் 15 அடி. வைகாசி பெüர்ணமிக்கு 6 நாள்கள் முன்பும், 4 நாள்கள் பின்னரும் என மொத்தம் 10 நாள்கள் தேரோட்டம் நடைபெறும். கடைசியாக 1977-ம் ஆண்டுதான் இங்கு தேரோட்டம் நடைபெற்றது. பாரம்பரியமிக்க இக் கோயில் தேர் பழுதடைந்ததால் கடந்த 30 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் உள்ளது.

 இது குறித்து இக்கோயிலின் பரம்பரை பூசாரி எச்.ஆர்.ரகுநாத பட்டாச்சாரி (77) கூறியது:

 அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 800 ஆண்டுகளாக எங்களது குடும்பத்தினர் தான் பரம்பரை பூசாரியாக இருந்து வருகின்றனர். நான், அளேபுரம் அரசுப் பள்ளியில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றேன்.  சிறுவயதில் இருந்தே இக்கோயிலில் பூசாரியாகவும் பணியாற்றி வருகிறேன். பாரம்பரியமிக்க இக்கோயிலை சீரமைக்க என்னிடம் படித்த பல மாணவர்கள் உதவி வருகின்றனர். இருப்பினும் பழமையான தேர் பழுதடைந்து தேரோட்டம் நடைபெறாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

 புதிய தேர் செய்து தரும்படி இந்துசமய அறநிலையத்துறை உயர்அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

 இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் கூறியது: இக் கோயிலுக்கு புதிய தேர் செய்வதற்காக அறங்காவலர் குழு சார்பில் ரூ. 1.25 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த உபயதாரர் ஒருவரும் இப்பணிக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார். விரைவில் புதிய தேர் தயாராகிவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT