முகப்பு
தருமபுரி

நாமகிரிப்பேட்டை சமத்துவபுரத்தில் ஆய்வு

நாமக்கல், ஜன.8: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் சோ. மதுமதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். நாமகிரிப்பேட்டை ஊராட

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

நாமக்கல், ஜன.8: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் சோ. மதுமதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கார்கூடல்பட்டியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட ஆட்சியர், அங்கே சீரான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

மேலும் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் நாமகிரிப்பேட்டை பட்டறை மேடு, நாடார் வீதி, 6-வது வார்டு காலனிப் பகுதி, ஆர்வி மில் சாலை 15-வது வார்டில் கிழக்கு வீதி, அம்பேத்கர் காலனி ஆகிய பகுதிகளில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் ரூ. 82.13 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் கான்கிரீட் சாலைகளின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →