தருமபுரி

அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் பயணிகள்!

தருமபுரி, ஜன.10: தருமபுரியை அடுத்த முத்தம்பட்டி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  தருமபுரி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தூரத்தில் உள்ள முத்தம்

ஜெபலின்ஜான்

தருமபுரி, ஜன.10: தருமபுரியை அடுத்த முத்தம்பட்டி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 தருமபுரி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தூரத்தில் உள்ள முத்தம்பட்டி ரயில் நிலையம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

 முத்தம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சேலம், தருமபுரி, பெங்களூர், ஒசூர் ஆகிய நகரங்களுக்கு செல்லவும், பொம்மிடியில் இருந்து தருமபுரி, ஒசூர், பெங்களூர் செல்லவும் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

 பஸ் போக்குவரத்தைவிட ரயில் போக்குவரத்தே எளிதாக உள்ளதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், பஸ்ûஸ விட ரயில் கட்டணம் 50 சதவீதம் வரை குறைவாக உள்ளதாகவும் கூறினர்.

 இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்டோரும், சனிக்கிழமை, அமாவாசை, அனுமன் ஜெயந்தி மற்றும் பண்டிகைக் காலங்களில் 1,000-க்கும் மேற்பட்டோரும் வந்து செல்கின்றனர்.

 சேலம்-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-சேலம் பயணிகள் ரயில், சேலம்-பெங்களூர் இன்டர்சிட்டி ரயில், யஷ்வந்த்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் "கிராசிங்'குக்காக சில ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன.   இந்த ரயில் நிலையத்தில் இருக்கை வசதி, குடிநீர் வசதி இல்லை. மேலும், பிளாட்பார விளக்குகள் எரிவது இல்லை. இதனால், இரவு நேரங்களில் வரும் பயணிகள் "டார்ச்லைட்' உதவியுடன் செல்ல வேண்டிய நிலையுள்ளது.  மேலும், முத்தம்பட்டி, வேப்பமரத்தூர் ஆகிய கிராமங்களிலிருந்து முத்தம்பட்டி ரயில் நிலையம் செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

 முத்தம்பட்டி ரயில்நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மோசமாக உள்ள சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT