முகப்பு
தருமபுரி

பைக் விபத்தில் சிறுவன் சாவு

சேலம், ஜூன் 28: சேலம் பெரியார் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி விழுந்ததில் அதில் பயணம் செய்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சேலம் கிச்சி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:58 AM
பகிர்:

சேலம், ஜூன் 28: சேலம் பெரியார் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி விழுந்ததில் அதில் பயணம் செய்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சேலம் கிச்சிப்பாளையம் பால விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சேகர். இவரது மகன் கோபிநாத் (16). இவர் தனது உறவினர் வெங்கடேசன் (40) என்பவருடன் வியாழக்கிழமை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

Advertisement

வாகனத்தை வெங்கடேசன் ஓட்டிச் சென்றார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள பெரியார் மேம்பாலத்தில் செனறபோது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதல் இருப்பதற்காக வாகனத்தை வெங்கடேசன் திருப்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறியதால் இருவரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் இருவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டன. உடனடியாக இருவரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.