முகப்பு
தருமபுரி

உள்ளாட்சி அமைப்புகள் மறுவரையறை மீது கருத்துத் தெரிவிக்கலாம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறு வரையறை வரைவு கருத்துருகள் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகள், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறு வரையறை வரைவு கருத்துருகள் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகள், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மறு வரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை கருத்துருகள், கிராம ஊராட்சி அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ் வரைவு மறுவரையறையின் மீது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை, பொதுமக்கள்,  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எழுத்துப் பூர்வமாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வருகிற 2018 பிப்ரவரி 2 ஆம் தேதி மாலை 5.45 மணி வரைத் தெரிவிக்கலாம் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →