தருமபுரி

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

பாளேத்தோட்டம் அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
போச்சம்பள்ளியை அடுத்த பாளேத்தோட்டம், அரசுப் பள்ளியில் நடைபெற்ற குறுவள மைய அளவிலான கண்காட்சியில் 15-க்கும் மேற்ப்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன.
இதில் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட இயற்கை உணவுகளை வகைபடுத்தி மாணவர்கள்ஆர்வத்துடன் வைத்திருந்தனர். ஆசிரியர் பயிற்றுநர் ஜெயமணி, சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை பாராட்டினர்.
இதில் முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பில் மாவுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முதல் பரிசும், பி.திப்பம்பட்டி பள்ளி 2-ஆம் பரிசும், பாளேத்தோட்டம், பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. கரடனூர் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது.
6 முதல் 8-ஆம் வகுப்பில் தாதம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி முதல் பரிசும், பாளேத்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி 2-ஆம் பரிசும், கெங்கிநாயன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. கெங்கிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 15 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT