சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 13 பேர் காயம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 13 பேர் திங்கள்கிழமை காயமடைந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 13 பேர் திங்கள்கிழமை காயமடைந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த சின்னதுரை மகன் முகேஷ் (23). இவருடன், இவரது உறவினர்கள் ஏற்காட்டுக்கு ஒரு வேனில் சென்றுள்ளனர்.
அப்போது, தென்கரைக்கோட்டை- பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் சென்றபோது, வாகன ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் சுற்றுலா வேன் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதில், முகேஷ் (23), சுவாதி (22), ரேவதி (32), தியா (7), நந்தா (13), முருகன் (38), சேகர் (26), மங்கா (34), பிரவீன் (9), பிரியதர்ஷினி (13), ரமேஷ் (45), கோகுல் (12), சிலம்பரசன் (24) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வேன் ஓட்டுநர் குமரேசன் (45) என்பவர் தலைமறைவானார்.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.