மக்கள் குறைகேட்பில் 487 மனுக்கள்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்,
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 487 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) துர்காமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.