அதிமுக சார்பில் விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
தருமபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டன.
தருமபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தருமபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வீரர்களுக்கான கைப்பந்து மற்றும் கூடைப் பந்து போட்டிகள் அண்மையில் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.
இப் போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிகளில் சிந்தல்பாடி அணி முதலிடத்தையும், தருமபுரி அணி 2-ஆவது இடத்தையும், நல்லம்பள்ளி அணி மூன்றாவது இடம், மொரப்பூர் அணி நான்காவது இடத்தையும் பிடித்தன. இப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று, முதலிடம் வகித்த அணி ரூ. ஒரு லட்சம், இரண்டாவது இடம் வகித்த அணிக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம் இடம் வகித்த அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 4-ஆவது இடம் வகித்த அணிக்கு ரூ.10 ஆயிரத்தை பரிசு வழங்கினார்.
விழாவில் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.