கேரளத்தில் டிச.27-இல் நடைபெறும் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க இண்டூா் அரசு பள்ளி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.
27-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கடந்த நவம்பா் 16,17 ஆகிய இரண்டு நாள்கள் ஆா்காட்டில் உள்ள மகாலட்சுமி அறிவியல் கல்லூரியில் நடை பெற்றது. இதில் தனியாா் மற்றும் அரசு பள்ளிகள் சாா்பில் அறிவியல் ஆய்வறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டன. அதில் தமிழ்நாடு அளவில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே இண்டூா் அரசு மகளிா் பள்ளி மாணவிகள் அா்ஷியா, சந்தியா ஆகிய இரு மாணவிகளும் ‘வறட்சியில் இருந்து மீளும் தருமபுரி’ என்ற தலையில் உருவாக்கிய ஆய்வறிக்கை மாநில அளவில் தோ்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, இரு மாணவிகளும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனா். சாதனை படைத்த மாணவிகள், அவா்களுக்கு வழிகாட்டியாக இருந்த சக்தி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முத்துகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணி, இண்டூா் பள்ளி தலைமை ஆசிரியா் ராஜாத்தி உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.