தருமபுரி

ஐயப்ப பக்தர்கள்,இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சபரிமலையில் பெண்களை வழிபட  அனுமதித்ததைக் கண்டித்து, தருமபுரியில் வியாழக்கிழமை ஐயப்ப பக்தர்கள் பேரவை

DIN

சபரிமலையில் பெண்களை வழிபட  அனுமதித்ததைக் கண்டித்து, தருமபுரியில் வியாழக்கிழமை ஐயப்ப பக்தர்கள் பேரவை மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐயப்ப பக்தர்கள் நிறுவனத் தலைவர் முனுசாமி, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் சந்திரசேகரன், வழக்குரைஞர்கள் ரமேஷ் வர்மா, ஜெயபிரகாஷ், பாஜக மாவட்ட பொதுச் செயலர் அனந்த கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. அ.பாஸ்கர் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், சபரிமலையில் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் இருவரை வழிபட அனுமதித்த கேரள மாநில அரசைக் கண்டித்தும், இனி வருங்காலங்களில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஊத்தங்கரையில்... ஊத்தங்கரையில் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சி கோட்டப் பொறுப்பாளர் அசோக் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் குப்தா, செய்தி தொடர்பாளர் இறையருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஒசூரில்... ஒசூர் ராம் நகரில் நடைபெற்ற போராட்டத்தில்,  பாஜக மாநில பொதுச் செயலர் கே.எஸ்.நரேந்திரன், கோட்டப் பொறுப்பாளர் ஜி.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலர் எம்.நாகராஜ், மாவட்டச் செயலர் வரதராஜன், ராஜு, மாவட்டத் தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச் செயலர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், கேரள முதல்வரையும், கேரள அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT