தருமபுரி

ஜன.30 பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கசமூக நல்லிணக்க மேடை முடிவு

DIN


ஜன.30-ஆம் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்க சமூக நல்லிணக்க மேடை சார்பில் முடிவு செய்துள்ளது.
தருமபுரியில் சனிக்கிழமை சமூக நல்லணிக்க மேடை சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இ.பி.பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலர் பொ.மு.நந்தன், மாவட்டச் செயலர் த.ஜெயந்தி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் சாதிக் பாஷா, மாதர் சங்க மாவட்டச் செயலர் கிரைஸாமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வருகிற ஜன.30-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பது. தருமபுரி பெரியார் சிலை அருகிலிருந்து கடைவீதி வழியாக காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்று காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது மற்றும் தொலைத்தொடர்பு நிலையம் அருகே பயங்கரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழியேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT