தருமபுரி

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள கரடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவரின் மகன் பிரபு (25). இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பிரபு, தனது நண்பர்கள

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள கரடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவரின் மகன் பிரபு (25). இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பிரபு, தனது நண்பர்களுடன் திங்கள்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கோத்திக்கல் பகுதியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமானப் பகுதிக்குச் சென்றுவிட்டதால், எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கி பிரபு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீஸார், தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT