தருமபுரி

உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுகோள்

DIN


அரூர்: உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரூரை அடுத்த சித்தேரி மலைப் பகுதியிலுள்ள வாச்சாத்தி, அரசநத்தம், கலசபாடி, சூரியகடை, எஸ்.தாதம்பட்டி, மலைத்தாங்கி, பாலகுட்டை, நாய்குத்தி, வேலனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை சிலர் வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த நாட்டுத் துப்பாக்கிகளால் வன விலங்குகளை வேட்டையாடுதல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதாக தெரியவந்தது.
இதையடுத்து, சித்தேரி மலைத் தொடரில் உள்ள கிராமங்களில் அரூர் காவல் ஆய்வாளர் டி.கண்ணன் தண்டோரா மூலம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதில், பொதுமக்கள் தாமாக முன்வந்து நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைத்தால் எவ்வித வழக்குகளும் கிடையாது. அதே நேரத்தில் காவல் துறையினர் சோதனை செய்து உரிமம் பெறாத துப்பாக்கிகளை வைத்திருப்போர் பிடிபட்டால், கைது நடவடிக்கை இருக்கும் என எச்சரித்தனர்.
இதேபோல், கோட்டப்பட்டி காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் பி.ரவி, உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி மலைக் கிராம மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT