தருமபுரி

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி அசோக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்டச் செயலர் பி.வி.மாது தலைமை வகித்தார்.
இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.  உயிரிழந்த அசோக் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலர் டி.மாதையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT