தருமபுரி

பளு தூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு  விடுதியில் சேர மே 30-இல் தேர்வு போட்டிகள்

பளு தூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு விடுதியில் சேர மே 30-ஆம் தேதி வேலூரில் தேர்வு போட்டிகள் நடைபெறுகிறது.

DIN


பளு தூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு விடுதியில் சேர மே 30-ஆம் தேதி வேலூரில் தேர்வு போட்டிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பளு தூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான மாநில தேர்வு போட்டிகள் வருகிற மே 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப் போட்டிகளில், 7-ஆம் வகுப்பு மற்றும் 8, 9, பிளஸ் 1, இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள், முதுநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் பங்கேற்கலாம். 
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றோர் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றோர் மற்றும் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான படிவங்கள்  இணையதள முகவரியில் வருகிற மே 27-க்குள் நிறைவு செய்து அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT