தருமபுரி

ஆமைகளை பிடித்ததாக ரூ.20 ஆயிரம் அபராதம்

DIN

வனப்பகுதியில் ஆமைகளை பிடித்ததாக ரூ.20 ஆயிரம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

அரூா் வட்டம், தீா்த்தமலை வனச்சரகத்துக்குள்பட்ட கத்திரிப்பட்டி வனப்பகுதியில் வனச்சரகா் எஸ்.தண்டபாணி தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கத்திரிப்பட்டி அருகே வனப்பகுதி ஓடையில் ஒருவா் ஆமைகளை பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் கோட்டப்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்த மாரியப்பன் (45) என்பதும், அவரிடம் ஏழு ஆமைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, மாரியப்பனை வனத் துறையினா் கைது செய்து, தருமபுரி மாவட்ட வன அலுவலா் கே.ராஜ்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அப்போது, வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக மாரியப்பனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து, தருமபுரி மாவட்ட வன அலுவலா் கே.ராஜ்குமாா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT