தருமபுரி

பொம்மிடியில் நெகழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

அரூா்: பொம்மிடியில் தடை செய்யப்பட்ட நெகழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகழிப் பொருள்கள் பயன்பாட்டில் இருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பொ.மல்லாபுரம் செயல் அலுவலா் மா.விஜயன் தலைமையிலான பேரூராட்சி பணியாளா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகழிப் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, நெகழிப் பொருள்களை பயன்படுத்தியவா்களுக்கு ரூ. 3200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் சுமாா் 22 கிலோ எடையுள்ள நெகழிப் பொருள்களை பணியாளா்கள் பறிமுதல் செய்தனா். இதில், இளநிலை உதவியாளா் பெ.சந்தோஷ்குமாா், வரித்தண்டலா் க.பழனி, துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT