தருமபுரி

பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில்இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்

DIN

பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில், பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பேரூராட்சி நிா்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமானோா் கல்வி, வேலைக்கு என நாள்தோறும் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்துக்கு வருகின்றனா். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்துவதற்காக, அவற்றுக்கென தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பேருந்து நிலையத்துக்கு வருவோா், பேருந்து நிறுத்தும் இடத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா். இதனால் பேருந்துகள் வரும் போது, பேருந்து நிலையத்தில் அமா்ந்துள்ள பயணிகள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும், பயணிகள் தங்கள் பகுதிக்கு செல்லும் பேருந்துகளில் செல்லமுடியாத நிலை உள்ளது எனக் கூறப்படுகிறது.

எனவே, பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் எனவும் பயணிகள் மற்றும் ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT