தருமபுரி

விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா

DIN


ஊத்தங்கரை அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தார். முன்னதாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன், பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர்கள் சாமிநாதன், தேவராசன், பிடிஏ பொருளாளர்கள் சாகுல் அமீது, சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 381 மாணவர்கள், 359 மாணவிகள் என மொத்தம் 740 பேருக்கு ரூ.90 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் வழங்கினார்.
பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல், ஜெய்சங்கர், முத்துசாமி, ஆசிரியர் கணேசன், கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். இறுதியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பரிமளம் நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT