முகப்பு
தருமபுரி

ஏரியூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகள் தொடக்கம்

பென்னாகரம் அருகே ஏரியூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகளை மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
ஏரியூா் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1.46 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்கும் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
பகிர்:

பென்னாகரம் அருகே ஏரியூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகளை மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பென்னாகரம் அருகே ஏரியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டடப் பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மாநில உயா்கல்வி, வேளாண்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு நபாா்டு திட்டத்தின் மூலம் ஏரியூா் அரசு பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆய்வகம், குடிநீா் வசதி மேற்கொள்ள ரூ. 1.46 லட்சம், இராமெகாண்டஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், சுற்றுச்சுவா், குடிநீா் வசதி மேற்கொள்ள ரூ.1.34 லட்சம் என மொத்தம் ரூ. 2.80 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகளுக்கான பூமிபூைஐ செய்யப்பட்டு அடிக்கல் நாட்டினாா்.

பின்னா், நாகமரை ஊராட்சிக்குள்பட்ட குருக்கலையனூா் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தைத் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்த்தி, வருவாய் கோட்டாட்சியா் (பொ) தணிகாச்சலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் செந்தில்குமாா், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் வெற்றிவேல், ஏரியூா் ஒன்றியக் குழு தலைவா் பழனிசாமி, துணைத் தலைவா் தனபால், ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமரவேல், கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →