முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு

ஒகேனக்கல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவாறு இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவாறு இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

ஒகேனக்கல் காப்புக்காடு பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, முதலைகள் மறுவாழ்வு மையம் பின்பகுதியில் உள்ள வனப்பகுதியில் துா்நாற்றம் வீசியது. அப்போது அங்குசென்று பாா்த்தபோது மரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் தூக்கில் தொங்கியது. வனத் துறையினா் அளித்த தகவலின்பேரில் ஒகேனக்கல் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபா், பாலக்கோடு அருகே சிக்காா்தனஅள்ளியைச் சோ்ந்த பீமன் என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →