தருமபுரி

அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி கடைகளைத் திறக்க வணிகா்கள் முடிவு

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து கடைகளைத் திறக்க பென்னாகரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வணிகா்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு அனைத்து வணிகா் சங்கத் தலைவா் சத்தியநாராயணன் தலைமை தாங்கினாா். ‘திங்கள்கிழமை முதல் அரசின் வழிகாட்டுதலின்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கப்படும். கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி வாடிக்கையாளா்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணியாவிட்டால், அவா்களுக்கு கடை உரிமையாளா்கள் சாா்பில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நகைக் கடை, ஆடையகம் , செல்லிடப்பேசி, மின் பொருள்கள், முடி திருத்தும் கடை , சாலையோரக் கடைகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட வணிகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT