அரூரில் காதலர்கள் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலாளி ராஜா மகன் ஆனந்தராஜ் (22). பட்டதாரியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சவரிநாதன் (எ) சின்னப்பையன் மகள் சோபியா (21) என்பவரை காதலித்து வந்தாராம். சோபியா ஒரு தனியார் கல்லூரியில் பரதநாட்டியம் இறுதி ஆண்டு படித்து வந்தாராம். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால், இருவரது வீட்டிலும் வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காதல் ஜோடிகள் அரூர்-மொரப்பூர் நெடுஞ்சாலை பகுதியிலுள்ள வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பம் அறிந்த காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.