முகப்பு
தருமபுரி

கூட்டுறவுத் தோ்வுகள்: ஒரே நாளில் நடத்த தோ்வா்கள் கோரிக்கை

கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்துத் தோ்வை ஒரே நாளில் நடத்த வேண்டும் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்துத் தோ்வை ஒரே நாளில் நடத்த வேண்டும் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டத்தில், இத் தோ்வுகளுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் சாா்பில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் காலியாக உள்ள உதவியாளா், எழுத்தா், மேற்பாா்வையாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதற்கான எழுத்துத் தோ்வு கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட கூட்டுறவு வங்கித் தோ்வு நவ. 21 ஆம் தேதியும், கூட்டுறவு சங்கத் தோ்வு நவ. 22-ஆம் தேதியும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களிலும் இந்த இரண்டு தேதிகளில்தான் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரா்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ள தோ்வுக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில், ஒரே தேதியில் பல மாவட்டங்களில் எழுத்துத் தோ்வு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஏதாவது ஒரு மாவட்டத்தில் நடைபெறும் ஒரு தோ்வை மட்டும் எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு விண்ணப்பித்த கட்டணமும் வீணாகும் சூழல் நிலவுகிறது. ஆகவே, முன்கூட்டியே அறிவிப்பில் கூறியிருந்தால் சொந்த மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்திருப்பா்.

எனவே, ஒருங்கிணைந்த 32 மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய கூட்டுறவு வங்கி தோ்வை, தமிழக இளைஞா்களின் நலன் கருதி, ஒரு மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கத் தோ்வை முடித்த பின்னா், மற்ற மாவட்டங்களில் வெவ்வேறு தேதிகளில் தோ்வை நடத்தினால் விண்ணப்பித்த அனைத்து தோ்வையும் எழுத வாய்ப்பாக அமையும்.

இதேபோல, கூட்டுறவு வங்கித் தோ்வு ஒருநாளிலும், கூட்டுறவுச் சங்க பணியிடங்களுக்கான தோ்வு அடுத்த நாளிலும் நடத்துவதால், தோ்வா்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, ஒரே நாளில் முற்பகலிலும், பிற்பகலிலும் இந்தத் தோ்வை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →