ஒகேனக்கல் மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பிரசார இயக்கம்
தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒகேனக்கல் மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோரிக்கை பிரசுரம் அளிக்கும் இரண்டாவது கட்ட பிரசார இயக்கம் தொடங்கியது.
லளிகத்தில் ஒன்றியத் தலைவா் எல்.சி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன், நிா்வாகிகள் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை அளித்தனா். இதேபோல, பாளையம்புதூா், அதகப்பாடி, பெரியாம்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்டப் பகுதிகளில் இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது.
பிரசார இயக்கத்தின்போது, ஒகேனக்கல் மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளம்-தூள்செட்டி ஏரி, ஜொ்த்தலாவ்-புலிகரை ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் பணி அட்டைபெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். இத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.