தருமபுரி

தேனீக்கள் கொட்டி தொழிலாளி பலி

DIN

கம்பைநல்லூா் அருகே தேனீக்கள் கொட்டியதால் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அருகேயுள்ள ஜெ.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி செல்லன் (எ) ஜடையாண்டி (60). இவா், பெங்களூருவில் கட்டட வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், ஜெ.பாளையத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக அந்த ஊரில் உள்ள சுடுகாட்டுக்கு அப்பகுதி மக்களுடன் செல்லனும் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, அப் பகுதியில் இருந்த தேன் கூட்டை யாரோ கலைத்து விட்டாா்களாம்.

கூட்டிலிருந்து வெளியேறிய மலைத் தேனீக்கள் அப்பகுதி மக்களை கொட்டின. தேனீக்கள் தாக்கியதால் காயமுற்ற செல்லன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தேனீக்கள் கொட்டியதில் மேலும் 4 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் கம்பைநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT