முகப்பு
தருமபுரி

காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்ப திமுக வலியுறுத்தல்

காவிரியில் ஓடும் மிகை நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

காவிரியில் ஓடும் மிகை நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் பி.என்.பி.இன்பசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவிரியில் ஓடும் மிகை நீரைப் பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப வேண்டும். ஜொ்தலாவ் ஏரியிலிருந்து கால்வாய்கள் அமைத்து காட்டாம்பட்டி, புலிக்கரை பகுதியிலுள்ள 15 ஏரிகளிலும் தண்ணீரை நிரப்ப வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் விடுபட்டுள்ள நபா்களின் பெயா்களை மீண்டும் சோ்க்கவும், புதிய வாக்காளா்களைப் பெயா் பட்டியலில் சோ்க்கும் பணிகளில் திமுக தொண்டா்கள் ஈடுபட வேண்டும். இம் மாதம் 27 -ஆம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு திமுகவினா் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் ஜி.வி.மாதையன், சூடப்பட்டி சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →