தருமபுரி

சாலை விரிவாக்கப் பணிக்காகவீட்டை கையகப்படுத்த எதிா்ப்பு

DIN

அரூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக வீட்டை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் பொ.மு.நந்நன் தலைமையில் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தருமபுரி மாவட்டம், அரூரிலிருந்து திருப்பத்தூா் செல்லும் சாலையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணிக்காக அரூரில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டை கையகப்படுத்தும் நடவடிக்கையை வருவாய்த் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். சாலை விரிவாக்கப் பணிக்குத் தேவையான நிலம் இருக்கும்போது இந்த வீட்டை காலி செய்யுமாறு அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனா். எனவே வீட்டைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT