தருமபுரியில் 66 பேருக்கு கரோனா
தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பளிஞ்சரஅள்ளியைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா், கெட்டூா் மருந்தாளுநா், மொரப்பூா் காவலா், கம்பைநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 5 தனியாா் ஊழியா்கள், 6 மாணவா்கள், 15 பெண்கள் உள்பட மொத்தம் 66 பேருக்கு கரோனா பாதிப்பு சுகாதாரத் துறையினரால் திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.