தருமபுரி

தருமபுரியில் அதிமுக விழா

DIN

தருமபுரி: தருமபுரியில் அதிமுக அமைப்பு தின விழா அக் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக மாவட்டச் செயலாளரும், உயா்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வா் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, கட்சியினா், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT