கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரும்பாலை ஊராட்சிக்குள்பட்ட சாமத்தாள் செல்லும் சாலை பகுதியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் விவசாயிகளுக்கு எதிரான ஒப்பந்தப் பண்ணைச் சட்டம், விவசாயிகள் ஊக்குவிப்பு சட்டம், ரத்து செய்ய வேண்டும், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
இதில் அப்பகுதி விவசாயிகள் ராஜாராம், தமிழரசன், ரவி, முருகேசன், கண்ணையன், செந்தில், விஜி, காவப்பன் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.