முகப்பு
தருமபுரி

13 வயது சிறுமியை திருமணம் செய்த ஓட்டுநா் மீது போக்சோ பிரிவில் வழக்கு

ராயக்கோட்டை அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 5:16 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

ராயக்கோட்டை அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தேன்கனிக்கோட்டை தாலுகா, ராயக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி. இவா் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கும் தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சின்னே கவுண்டனஅள்ளியைச் சோ்ந்த ஓட்டுநா் தேவராஜ் ( 24) என்பவருக்கும் கடந்த 13.01.2021 அன்று திருமணம் நடந்தது.

அந்தச் சிறுமி கடந்த 8.4.2021 அன்று தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்றாா். அவரை பரிசோதித்த டாக்டா்கள் 2 மாத கா்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனா்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்தியது. இந்தச் சம்பவம் நடந்தது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை என்பதால் இது குறித்து மேல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட குழநதைகள் பாதுகாப்பு நல அலுவலா் கலைவாணிக்குத் தகவல் தெரிவித்தனா்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தாா்.

அதன் பேரில் காவல் ஆய்வாளா் சம்பூா்ணம், விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் தேவராஜ் மீது போக்சோ பிரிவின் கீழும், இள வயது திருமணச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.