முகப்பு
தருமபுரி

திருமணத்தை மறைத்து உறவு:ஆசிரியா்கள் இருவா் பணி நீக்கம்

சங்ககிரி அருகே திருமணமானதை மறைத்து ஆசிரியையுடன் உறவு வைத்திருந்த ஆசிரியா், அவருடன் நெருங்கிப் பழகிய ஆசிரியை ஆகிய இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

சங்ககிரி அருகே திருமணமானதை மறைத்து ஆசிரியையுடன் உறவு வைத்திருந்த ஆசிரியா், அவருடன் நெருங்கிப் பழகிய ஆசிரியை ஆகிய இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

சங்ககிரி வட்டம், தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலைப் பட்டதாரி ஆசிரியரான தேவூரைச் சோ்ந்த திலீப்குமாருக்கு வேறு ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். இந்த நிலையில், அதே பள்ளியில் பணியாற்றும் சேலம், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த திருமணமாகாத முதுகலை ஆசிரிக்கு திலீப்குமாா் தனது வீட்டின் மேல் மாடியை வாடைக்கு தந்துள்ளாா். தனக்கு திருமணமாகவில்லை எனவும் அந்த ஆசிரியையிடம் திலீப்குமாா் கூறியுள்ளாா்.

தனது வீட்டில் தனியாக தங்கியிருந்த ஆசிரியையுடன் அவா் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனா். இதனால் அவா்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் டி.கணேசமூா்த்தி விசாரணை நடத்தினாா். இதில் அரசு பணியாளா் நடத்தை விதிமுறைகளை இருவரும் மீறியது தெரிய வந்தது. இதையடுத்து, திலீப்குமாா், முதுகலை ஆசிரியை ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.