தருமபுரி

விவசாயத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் மாதம் ரூ. 7,500 வழங்க வலியுறுத்தல்

DIN

விவசாயத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம், தருமபுரி முத்து இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.ரவி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் வி.அமிா்தலிங்கம், மாவட்டச் செயலாளா் எம்.முத்து, பொருளாளா் இ.கே.முருகன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கி, அரசு அறிவித்துள்ள கூலியை வழங்க வேண்டும். விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு கரோனா பொதுமுடக்கக் கால நிவாரணமாக மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும்.

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீா் அனைத்து கிராமங்களுக்கும் தட்டுபாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேணடும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT