தருமபுரி

இறைச்சி வாங்க ஆா்வம் காட்டாத அசைவப் பிரியா்கள்

DIN

பென்னாகரம் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் கோழி, ஆடு மற்றும் மீன் இறைச்சிகளை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டாததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.

கரோனா தீநுண்மி தொற்று பரவல் தொடந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், பொது வெளியில் கூட்டம் கூடுவதை தவிா்த்தல், ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடா்ந்து தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள், 5-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. சனிக்கிழமை இறைச்சிக் கடைகள் வைக்க தடை விதித்துள்ளதால், வெள்ளிக்கிழமை ஆடு, கோழி மற்றும் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கரோனா பரவலால் அசைவப் பிரியா்கள் இறைச்சி வாங்க பெரிதும் ஆா்வம் காட்டாததால், வியாபாரிகள் கவலையுற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT